உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேன்ட்ஸ் ஆப் நாத யோகினி இசை தொகுப்பு வெளியீடு

சேன்ட்ஸ் ஆப் நாத யோகினி இசை தொகுப்பு வெளியீடு

கோவை; நாத யோகி பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினியின் போலந்து நாட்டு பக்தர்கள்,'சேன்ட்ஸ் ஆப் நாத யோகினி' என்ற பெயரில், அவரது தெய்வீக உச்சாடனங்களை, இசைத் தொகுப்பாக உருவாக்கியுள்ளனர். இதன் அறிமுக விழா, கோவை விஜய் பார்க் இன் ஓட்டலில் நடந்தது. டாடா மெடிக்கல் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரீஷ் கிருஷ்ணமூர்த்தி, கோவை அன்னபூர்ணா குழுமத்தின் அம்மா சுந்தர்ராஜன், பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, ஓசூர் பி.எம்.சி., பொறியியல் கல்லுாரியின் தலைவர் குமார் ஆகியோர் இசை தொகுப்பை அறிமுகப்படுத்தினர். ஸ்பாட்டிபை, ஆப்பிள் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட ஊடகங்கள் வழியே வெளியிடப்பட்டது. இசைத்தொகுப்பில் உள்ள நான்கு பாடல்களும் ஒளிபரப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை