மேலும் செய்திகள்
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
13-Jun-2025
மெல்ல உயர துவங்கியது சோலையாறு நீர்மட்டம்
24-May-2025
வால்பாறை; தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்வதால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக காற்றுடன் கனமழை பெய்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை தடுப்பணை, வெள்ளமலை டனல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடவில்லை.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 116.58 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,812 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 884 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது. இதே போல், பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 78, பரம்பிக்குளம் - 55, ஆழியாறு - 9, வால்பாறை - 53, மேல்நீராறு - 85, கீழ்நீராறு - 63, காடம்பாறை - 34, மேல்ஆழியாறு - 11, சர்க்கார்பதி - 34, வேட்டைக்காரன்புதுார் - 12, மணக்கடவு - 30, துாணக்கடவு - 42, பெருவாரிப்பள்ளம் - 45, நவமலை - 5, பொள்ளாச்சி - 18 என்ற அளவில் மழை பெய்தது.
13-Jun-2025
24-May-2025