உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: சிறப்பு பஸ்கள் இயக்கம்

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: சிறப்பு பஸ்கள் இயக்கம்

50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிவர். அதனால், பொள்ளாச்சி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.குறிப்பாக, திண்டுக்கல், பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடியாக மாசாணியம்மன் கோவிலுக்கு, 25 சிறப்பு பஸ்களும், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நேரடியாக மாசாணியம்மன் கோவிலுக்கு, 25 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களும் பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் வழியாக, கோவிலுக்கு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, இன்று (நேற்று) மதியம் முதலே சிறப்பு பஸ்களின் இயக்கம் துவக்கப்பட்டது. அதேபோல, கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சீராகும் வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை