திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள்
மேட்டுப்பாளையம்; ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்சி, மதுரை, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மேட்டுப் பாளையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் முதல் கட்டமாக கூடுதலாக 20 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.