எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் சிறப்பு முகாம்
கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி பொது மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று குரும்பபாளையத்தில் நடந்தது. தாசில்தார்கள் செல்வி, ஜெயபாரதி முன்னிலை வகித்தனர். முகாமை பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி துவக்கி வைத்தார். முகாமில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை கோரி 299 மனுக்கள் உள்ளிட்ட 630 மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், நகரச் செயலாளர் சுரேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.