மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
கோவை : கோவை மாநகராட்சிக்கு நடப்பு 2024-25ம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கடடணம் உள்ளிட்டவற்றை செலுத்த வசதியாக, இன்றும் (5ம் தேதி), நாளையும் (6ம் தேதி) சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்படுகிறது. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். கிழக்கு மண்டலம்
24வது வார்டு குருசாமி நகர், 53வது வார்டு காந்தி நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 7வது வார்டு நேரு நகர் பஸ் ஸ்டாப், மேற்கு மண்டலத்தில் 36வது வார்டு ரவி முருகன் அபார்ட்மென்ட், 39வது வார்டு பெருமாள் கோவில் வீதி, சுண்டப்பாளையம் ஆகிய இடங்களில் இன்று (5ம் தேதி) சிறப்பு முகாம் நடைபெறும்.நாளை (6ம் தேதி) 42வது வார்டு மருதகோனார் வீதி, 75வது வார்டு மாரியம்மன் கோவில் வீதி, சீரநாயக்கன்பாளையம் பகுதியில், 35வது வார்டு தேவாங்க நகர், கற்பக விநாயகர் கோவில் வீதியில் 38வது வார்டு ஓணாப்பாளையம், விநாயகர் கோவில். வடக்கு மண்டலம்
19வது வார்டு மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 28வது வார்டு காமேதனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், தெற்கு மண்டலத்தில் 85வது வார்டு கோணவாய்க்கால் பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 97வது வார்டு கம்பீர விநாயகர் கோவில் மண்டபம், ஹவுசிங் யூனிட் பேஸ்-1, 89வது வார்டு சுண்டக்காமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம். மத்திய மண்டலம்
32வது வார்டு நாராயணசாமி லே-அவுட் சிறுவர் பூங்கா, 70வது வார்டு எம்.என்.ஜி., வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 63வது வார்டு 80 அடி ரோடு பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும்.இத்தகவலை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.