உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை பிரிவு

அரசு மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை பிரிவு

கோவை, : கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை பிரிவு விரைவில் செயல்படவுள்ளன. ஆர்த்தோ ஓ.பி., வார்டு அருகே, பழைய ஆபரேஷன் தியேட்டராக செயல்பட்ட இடம், இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பல் சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில், மதுரை, சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், பல்துறை சிறப்பு பல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டு இதற்கு, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், '' சிறப்பு பல் சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. கட்டுமான பிரிவுக்கு, ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2800 சதுர அடி பரப்பில் அதற்கான பணிகள் நடக்கின்றன. பல் பராமரிப்பு, ரூட் கெனால், பெரிய அளவிலான பல் அறுவை சிகிச்சைகள் இங்கு செய்யப்படவுள்ளன. தேவையான இயந்திரங்கள் வந்ததும், சிகிச்சை செயல்பாடுகள் துவங்கும், '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை