மேலும் செய்திகள்
கோகோ விளையாட்டில் மங்களூரு வடக்கு அணி சாம்பியன்
17-Oct-2025
கோவை: மாநில அளவிலான சிறப்பு ஐவர் கால்பந்து போட்டி, போத்தனுார் எமிரேட்ஸ் ஸ்போர்ட்ஸ் அரங்கத்தில் நடந்தது. கோவை சாக்கர் பள்ளி ஏற்பாட்டில் நடந்த போட்டியில் , தமிழகம் முழுவதும் இருந்து, 50க்கு மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். பத்து மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு, 14, 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு பிருந்தாவன் பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், வடவள்ளி ப்ரைடு புட்பால் கிளப் அணி, 12 வயதுக்கு உட்பட மாணவர்கள் பிரிவில் சாக்கர்ஸ் ஸ்போர்ட்டிங் அணி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், ப்ரைடு புட்பால் கிளப் அணி, 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் யூத் பிரண்ட்ஸ் புட்பால் கிளப் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ், மெடல், ட்ராபி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக, தி.மு.க., இணை செயலாளர் கோட்டை அப்பாஸ், 'சுவச் பாரத்' துாதர் அப்துல் ஹக்கீம், கோவை எமிரேட்ஸ் ஸ்போர்ட்ஸ் டர்ப் தலைமை பயிற்சியாளர் அர்ஷத் முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Oct-2025