உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக தனியார் நிறுவனங்களில் பணியாற்ற சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 10:00 மணி முதல் கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது.முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ், 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தங்களது சுயவிபரம் மற்றும் கல்வி சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு, 25ம் தேதி நேரடியாக வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை