மேலும் செய்திகள்
பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி திருவிழா
12-Jan-2025
தைப்பூசத் திருவிழா, கோவையில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், அமைந்துள்ள சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு தைப்பூச திருவிழா, நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார்.இந்த 29 அடி தேரில் சண்முகநாதர் ராஜ அலங்காரத்தில், ஞானி அவதாரத்தில் வள்ளி, தெய்வானை சமேதருடன் காட்சியளித்தார். தேர் புறப்படும் முன், 50க்கும் மேற்பட்ட சிறுமியர், வள்ளி கும்மி நடனம் ஆடினர். காலை 10:00 மணிக்கு, தேரோட்டோம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பைரவ பீடர் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தின் போது, கோட்டை பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், பக்தர்களுக்கு குளிர்பானங்கள், பிஸ்கட் வழங்கினர்.n குறிச்சி ஸ்ரீ பாதாள கண்டியம்மன் கோவிலில் தை பூசம் திருவிழாவை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு குறிச்சி குண்டத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடங்களுடன் செந்தில் ஆண்டவர் திருவீதி உலா நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான செந்தில் ஆண்டவர், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீ அய்யனார் ஆதினம் குருமகா சந்நிதானம் ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள் தலைமையில், திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.n காந்திபார்க் தண்டாயுதபாணி கோவிலில், சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.n சித்தாபுதுார் பாலமுருகன் கோவிலில், சுவாமிக்கு பக்தர்கள் மயில் காவடி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். வள்ளி, தெய்வானை சமேதர சுவாமி திருவீதி உலா நடந்தது.n சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில், முருக பெருமானுக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமியர் காவடி எடுத்து ஆடினர்.n கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள, பழனியாண்டவர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.n கோவை கணபதி மாநகர் வெற்றி விநாயகர் திருக்கோவிலில் உள்ள முருகர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
12-Jan-2025