கோயில்களில் சிறப்பு பூஜை
பெ.நா.பாளையம்: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டனர். இடிகரை வில்லீஸ்வரர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் செல்வமாரியம்மன் கோயில், செல்வ விநாயகர், முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன், கொங்காளம்மன், சக்தி மாரியம்மன், வரசித்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.