மத்திய கூட்டுறவு வங்கியில் சிறப்பு திட்டம் அறிமுகம்
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில், சிறப்பு வைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வைப்புகளுக்கு அதிகபட்ச வட்டி என்ற கணக்கில், 400 நாட்களுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் வைப்புகளுக்கு சிறப்பு வட்டி விகிதமாக 8.5 சதவீதம், ரூ.25 லட்சத்துக்கு மேல் வைப்புகளுக்கு சிறப்பு வட்டி விகிதமாக, 8.25 சதவீதம் வழங்கப்படுகிறது.இதற்கு வயது வரம்பு இல்லை. 60 வயதுக்கு மேல், மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் 8.25 சதவீதம், இதுவே ரூ.1 கோடிக்கு மேல் வைப்பு என்றால், 8.50 சதவீதம் சிறப்பு வட்டி வழங்கப்படுகிறது.குறைந்த வட்டியில், ரூ.75 லட்சம் வரை வீட்டு வசதிக் கடன், ரூ.20 லட்சம் வரை வீட்டு அடமானக் கடன் வழங்கப்படுகிறது. சிறப்பு நகைக்கடன் ஒரு கிராமுக்கு, 6,000 ரூபாய் என்ற வகையில், ரூ.30 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், சிறப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள, அருகில் உள்ள கிளைகளை அணுகலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.