உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சனிக்கிழமையில் சிறப்பு பயற்சி

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சனிக்கிழமையில் சிறப்பு பயற்சி

பொள்ளாச்சி; மாணவர்கள், தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சில அரசு பள்ளிகளில் சனிக்கிழமைதோறும் சிறப்பு வகுப்பும் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலாண்டுத் தேர்வு, செப். 18ல் தேதி துவங்கி, 26ல் நிறைவடைகிறது. அதன்படி, செப். 27 முதல் அக். 5 வரை காலாண்டு விடுமுறையும் அளிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சில பள்ளிகளில் தலைமையாசிரியர் விருப்பத்தின் பேரில் சனிக்கிழமைதோறும் சிறப்பு வகுப்பும் நடத்தப்படுகிறது. அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை நாள்காட்டியில் மொத்தம், 210 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படாமல் உள்ளது. எனவே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள், அவ்வப்போது அலகு தேர்வு நடத்தியும் தீவிர பயிற்சி அளிக்க வேண்டியுள்ளளது. இதன் வாயிலாக, கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் கூட பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொண்டு, தேர்ச்சி பெறுவர். அதனால், சனிக்கிழமைதோறும் பள்ளிக்கு வர மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை