உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து மத நம்பிக்கை குறித்த பேச்சுக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் கண்டனம்

ஹிந்து மத நம்பிக்கை குறித்த பேச்சுக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் கண்டனம்

மேட்டுப்பாளையம், : இந்து முன்னணி மாநில பேச்சாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான காரை ந.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில்நேற்று முன்தினம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் ஹிந்து மத பெண் தெய்வங்களை கொச்சைப்படுத்தியும், ரக்ஷா பந்தன் ராக்கி கயிற்றைப் பற்றியும், ஹிந்து மத கடவுள்கள் குறித்தும் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் மோசமாக பேசினர். ஹிந்து மட்டுமல்லாது கிறிஸ்தவ, இஸ்லாம் அமைப்புகளின் நம்பிக்கை குறித்தும் தவறாக பேசினர். இவர்கள் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பேசியவர்களை கைது செய்ய வேண்டும். இவர் களின் இத்தகைய பேச்சிற்கு அனைத்து ஹிந்துகள் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை