மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
07-Sep-2024
கோவை : கோவை காளப்பட்டியில் உள்ள, அனன் இன்டர்நேஷனல் பள்ளியின், 12வது ஆண்டு விளையாட்டு போட்டி, பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ், போட்டிகளை துவக்கி வைத்தார்.மாணவ, மாணவிகள் கராத்தே, யோகா, சிலம்பம், உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். தடகள போட்டி, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. ஷாலின்ஸ் அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஷார்ப் பாய்ன்ட் நிறுவனம் மற்றும் அனன் சர்வதேச பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன், தாளாளர் கண்ணன், செயல் இயக்குனர் ரேவதி, முதல்வர் நந்தகுமார், சீனியர் முதல்வர் சந்திரசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
07-Sep-2024