உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி; கபடி, கோ-கோ, வாலிபால் போட்டிகளில் அசத்தல்

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி; கபடி, கோ-கோ, வாலிபால் போட்டிகளில் அசத்தல்

கோவை; தியாகி என்.ஜி., ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான, 29ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் கடந்த, 18ம் தேதி துவங்கியது. நேற்று வரை கோ-கோ, கபடி, பூப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், கீர்த்திமான் மெட்ரிக் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் சுகுணா பிப் அணியையும், எஸ்.என்.வி., அணி, 2-1 என்ற செட் கணக்கில் சுகுணா இன்டர்நேஷனல் அணியையும் வென்றன.பெரியநாயகி மெட்ரிக் பள்ளி அணி, 2-1 என்ற செட் கணக்கில் டி.என்.ஜி.ஆர்., மெட்ரிக் பள்ளி அணியையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, 2-0 என்ற செட் கணக்கில் டி.வி., சேகரன் அணியையும், புனித பிலோமினா அணி, 2-1 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி.ஆர்., பள்ளி அணியையும் வென்றன.அதேபோல், 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான கபடி காலிறுதி போட்டியில் எஸ்.எஸ்.வி.எம்., விதன் மெட்ரிக் பள்ளி அணி, 40-14 என்ற புள்ளிகளில் ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி அணியையும், பி.எஸ்.ஜி., கன்யாகுருகுலம் அணி, 35-27 என்ற புள்ளிகளில் சபர்பன் மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன.பண்டிட் நேரு மெட்ரிக் பள்ளி அணி, 49-19 என்ற புள்ளிகளில் எஸ்.பி., மல்லய்யன் மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், காரமடை அரசுப் பள்ளி அணி, 28-27 என்ற புள்ளிகளில் ஜி.ஆர்.ஜி., பள்ளி அணியை வென்றன.கோ-கோ போட்டியில் (14 வயதுக்குட்ட மாணவர்), சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளி அணி, 13-3 என்ற புள்ளிகளில் அன்னை வயலெட் மெட்ரிக் பள்ளி அணியையும், கோவை வித்யா மந்திர் அணி, 11-4 என்ற புள்ளிகளில் வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளி அணியையும் வெற்றி கொண்டன.டி.கே.எஸ்., அணி, 15-5 என்ற புள்ளிகளில் எஸ்.பி., மல்லய்யன் மெட்ரிக் பள்ளி அணியையும், மாணவியர் பிரிவில், டி.என்.ஜி.ஆர்., அணி, 26-1 என்ற புள்ளிகளில் ஆர்.பி.எம்., பள்ளி அணியையும், விவேக் வித்யாலயா அணி, 16-7 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி.ஆர்., பள்ளி அணியையும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை