மேலும் செய்திகள்
கணித ஆசிரியருக்கு விளையாட்டுப் போட்டி
08-May-2025
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், ராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கான, 50வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.வாலிபால், கிரிக்கெட், கால்பந்து, மேஜைப்பந்து, பேட்மிட்டன், எறிபந்து மற்றும் தடகள போட்டிகள் நடந்தன. மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்ட போட்டிகள், குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் தொடர் ஓட்ட போட்டிகள்நடந்தன.இதில், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து ஏற்பாடுகளையும், உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தம் செய்திருந்தார்.
08-May-2025