மான்செஸ்டர் பள்ளியில் விளையாட்டு தினம்
கோவை; மான்செஸ்டர் சர்வதேச பள்ளியில், வருடாந்திர விளையாட்டு தினம், கோலாகலமாக நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் விதமாகவும், பலதரப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோர்களும் போட்டிகளில், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பள்ளியின் தலைவர் மூர்த்தி, தாளாளர் பிரியா, முதல்வர் ராஜேஷ் வாசுதேவன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.