மேலும் செய்திகள்
மழலையர் பள்ளி ஆண்டு விழா
25-Nov-2024
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள யுவா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் ஆதவன் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியையொட்டி மாணவர்களின் உடற்பயிற்சி நடனம், யோகா நடனம் நடந்தது. விழாவில், பள்ளியின் அறங்காவலர்கள் ஜெகதீசன், பால்ராஜ், பூர்ணிமா மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை நதியா நன்றி கூறினார்.
25-Nov-2024