ஆதர்ஷ் பள்ளியில் விளையாட்டு விழா
உடுமலை: பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், 13வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் அருண்கார்த்திக், அறங்காவலர் துர்கேஷ்நந்தினி தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் கிளப் நிர்வாகி பாலசுப்ரமணியம் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகம், ஒவ்வொரு பாடத்திலும், நுாறு மதிப்பெண்கள் பெற வைக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்படும், என, பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.