உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெர்க்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா

பெர்க்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா

கோவை; பெர்க்ஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா மற்றும் சுதந்திர தின விழா நடந்தது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் நடனம், யோகா மற்றும் டம்பல்ஸ் ஆகிய நிகழ்வுகளும், 3 முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களின் வரவேற்பு நடனம், மார்ச் பாஸ்ட், யோகா, கராத்தே, ஆர்ச்சரி, ஸ்கேட்டிங், சிலம்பம் மற்றும் ரிலேவும் நடந்தன. பெர்க்ஸ் பள்ளி தாளாளர் உஷா, செயலாளர் ஹரிராம், தலைமை ஆசிரியை ரீனா, துணை தலைமை ஆசிரியை மீனாட்சி, அகரம் பப்ளிக் பள்ளி முதல்வர் ஞானபண்டிதன், ராம்ராஜ் காட்டன் ஸ்டர்டஜி அட்வைசர் வெங்கடரமணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி