வேதாந்தா பள்ளியில் விளையாட்டு விழா
கோவை: சீராப்பாளையத்தில் செயல்பட்டு வரும் வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 14 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஒளிவீசும் குடை அணிவகுப்பு, டார்ச் விளக்கு அணிவகுப்பு, இசை அணிவகுப்பு, கொடி அணிவகுப்பு யோகா, கராத்தே, சிலம்பாட்டம், 100மீ, 200 மீ, 400 மீ, 800மீ தொடர் ஓட்டம், மட்டை பந்து, பூப்பந்து, குண்டு எறிதல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ஓம் சரவணன், இயக்குனர் சுதர்சன் ராவ், முதல்வர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.