மேலும் செய்திகள்
அகஸ்திய மகரிஷி கோவிலில் இன்று குரு பூஜை
09-Dec-2025
கோவை: ராம் நகர் சத்திய மூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தின், 75வது பூஜா மஹோத்ஸவ விழா, இன்று துவங்கி வரும் 28 வரை நடக்கிறது. இன்று காலை 5 மணிக்கு மஹாகணபதி ஹோமமும், 7:30 க்கு நவக்கிரஹ ஹோமம், 8 மணிக்கு சுப்ரமணிய சத்ரு சம்ஹார ஹோமமும், 8:30 க்கு ஸ்ரீ சுதர்சன ஹோமமும் நடக்கிறது. 11:45 மணிக்கு மஹா அன்னதானமும், 12:30 க்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 6:15 க்கு சூர்யநாராயணன் குழுவினரின் கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சியும்நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கிராமபிரதக் ஷனம், மஹா சங்கல்பம், 7:30 க்கு மஹன்யாச ருத்ரஜெபம், 10 மணிக்கு ஸ்ரீ ருத்ரஹோமம், 11:45 க்கு அன்னதானம், 12 மணிக்கு வசோர்தாரை,12:45க்கு மஹாதீபாராதனை, மாலை 6:15 மணிக்கு கேரளாவின் புகழ் பெற்ற நந்தகோவிந்தம் பஜனைகுழுவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வரும் 28 வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை அய்யப்பன் பூஜா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
09-Dec-2025