ஸ்ரீ தர்மசாஸ்தா சுழற்கோப்பை மாவட்ட வாலிபால் போட்டி
கோவை; மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகளில் மாணவர் பிரிவில்கிரசண்ட் பள்ளியும், மாணவியர் பிரிவில், பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் பள்ளியும் வெற்றி பெற்றன.ஸ்ரீ தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில், 15வது ஸ்ரீ தர்மசாஸ்தா சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள்நடந்தன.கோவை மாவட்டத்தை சேர்ந்த, 40 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன. கோவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ராமசந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார்.மாணவர்கள் பிரிவில், கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடம், எ.பி.சி., மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம், பெரியநாயகி அம்மாள் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி நான்காம் இடம் பிடித்தன.மாணவியர் பிரிவில், பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், விவேகம் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், எஸ்.வி.ஜி.வி.,மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம், சபர்பன் மேல்நிலைப்பள்ளி நான்காம் பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காட்டூர் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.