மேலும் செய்திகள்
ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
01-Sep-2025
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள்நடைபெற்றன. பின் நேற்று முன் தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். அவருடன் கிருஷ்ணரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று வசந்த உற்சவம் நடந்தது. தொடர்ந்து தங்கத்தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.---
01-Sep-2025