உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனமரபியல் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஒப்பந்தம்

வனமரபியல் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஒப்பந்தம்

கோவை; வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்த நிறுவனத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், எஸ்.என்ஆர்., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் யசோதா ஆகியோர் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர் கல்லுாரியின் உயிரி தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களின் இறுதியாண்டு கல்விசார் ஆய்வுத் திட்டம் மேற்கொள்ளவும், இரு நிறுவனமும் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில், கல்லூரி முதல்வர் சிவக்குமார், உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் ரத்தீஷ்குமார், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தலைமை வனப் பாதுகா வலர் கணேஷ்குமார், விஞ்ஞானி செந்தில் குமார், துணை வனப் பாதுகாவலர் மாதவராஜ் ஐ.எப்.எஸ்., தலைமை தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி