உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ருஷ்டி 2025 கைவினை பொருள் கண்காட்சி

ஸ்ருஷ்டி 2025 கைவினை பொருள் கண்காட்சி

கோவை; 'கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு' சார்பில் 'ஸ்ருஷ்டி 2025' கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, கோவை சுகுணா திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு கைவினைக் குழு, சென்னை இந்திய கைவினைக் குழு மற்றும் உலக கைவினைக் குழுவுடன் இணைந்து செயல்படுகிறது. கைவினைஞர்கள், நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களின் தனித்துவமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களின், 64 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. பூர்வீக நெசவுகள், ஜவுளி, புடவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், விலையுயர்ந்த நகைகள், வீட்டு அலங்காரம், ஆபரணங்கள் என பல்வகை கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் விற்பனை கண்காட்சி நாளை நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ