உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித லுார்து அன்னை ஆலய தேர்த்திருவிழா

புனித லுார்து அன்னை ஆலய தேர்த்திருவிழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் புனித லுார்து அன்னை ஆலயத்தில், தேர்த்திருவிழா நடந்தது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், புனித லுார்து அன்னை ஆலய தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை ஜேக்கப் தலைமை வகித்தார். பிராங்களின் ஜெயன்த் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.புனித லுார்து அன்னையின் தேர், அலங்கரிக்கப்பட்ட வாகனம், ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பாலக்காடு ரோடு, கோவை ரோடு சந்திப்பு, போஸ்ட் ஆபீஸ் ரோடு, ராஜாமில் ரோடு, எஸ்.வி.வி., நாயுடுவீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது.ஊர்வலத்தில், 2,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேர் ஊர்வலத்தில் கிறிஸ்தவ பக்தி பாடல்களை பாடி சென்றனர். மக்களுக்கு, லுார்து அன்னை இறை ஆசிர்வதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி