ஸ்டேன்ஸ் பள்ளிக்கு 163 வயது நிறைவு
கோவை; கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் 163வது ஆண்டு விழா, விமரிசையாக நடந்தது. தாளாளர் பிலிப் பாவ்லர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற்றினார். ஸ்டேன்ஸ் முன்னாள் மாணவரும், இந்தியகிரிக்கெட் வீரருமான ஜெயகுமார், பள்ளியில் பயின்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் 2024-25ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பள்ளி முதல்வர் ஜான் ஸ்டீபன், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.