உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 760 மனுக்களில் 109க்கு தீர்வு

உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 760 மனுக்களில் 109க்கு தீர்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், 760 மனுக்கள் பெறப்பட்டன. பொள்ளாச்சி நகராட்சியில், 13 அரசுத்துறைகளின், 43 சேவைகள் மற்றும் திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் கடந்த ஜூலை மாதம் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதில், நேற்று அருள்ஜோதி மகாலில், 33, 34, 35, 36 வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன், நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், கவுன்சிலர் செந்தில்குமார், தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறியதாவது: நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மொத்தம், 760 மனுக்கள் பெறப்பட்டு, 109 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. 651 மனுக்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 28, 29, 32 வார்டுகளுக்கு வரும், 15ம் தேதி விக்னேஸ்வரா மஹாலிலும், 14, 15, 16 வார்டுகளுக்கு வரும், 28ம் தேதி குமரன் நகர் பள்ளி வாசல் மண்டபத்திலும் முகாம் நடக்கிறது. நகராட்சி அலுவலகத்தில் நவ. 5 மற்றும் 6ம் தேதிகளில் அனைத்து வார்டுகளுக்கான முகாம் நடக்கிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை