உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 74 ஆயிரம் பேர் விண்ணப்பம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 74 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கோவை; 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் கடந்த ஜூலை, 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உட்பட, 13 துறைகளின் சார்பில், 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கோவை மாநகராட்சியில் வார்டுகள் ரீதியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்று வடக்கு மண்டலம், 13வது வார்டு, வெள்ளக்கிணறு ஆதி திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது. இதில், மகளிர் உரிமைத்தொகை வேண்டி, பெண்கள் திரளானோர் விண்ணப்பித்தனர். பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக, 1,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 15 முதல் நேற்று வரை நடந்த, 35க்கும் மேற்பட்ட முகாம்களில்,74 ஆயிரத்து, 606 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று, தெற்கு மண்டலம், 97, 100வது வார்டுகளுக்கு பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஹேமாம்பிகா திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !