உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அன்னுார்: 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் கோவை அருகே சர்க்கார் சாமக் குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. கோவை கலெக்டர் பவன்குமார்,கோவை எம்.பி., ராஜ்குமார், கோவை மேயர் ரங்க நாயகி, மாவட்ட சுகாதாரத் துணைஇயக்குனர் பாலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.