நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கோவை; ”நலம் காக்கும் ஸ்டாலின்” வடவள்ளியில் உள்ள மருதமலை சுப்ரமணியசுவாமி தேவஸ்தான பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியியல், மகளிர், குழந்தை , இருதவியல், நரம்பியல், இயன்முறை, நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறுகிறது. இதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து சான்றளிக்கப்படும். இதை எளிமைப்படுத்தும் வகையில் தற்போது நடைபெறும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவர்களால் பரிசோதித்து அவர்களுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு என்பதை கண்டறிந்து உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும். இதில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.