மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு
14-Nov-2024
அன்னுார் ; மாநில அளவிலான தடகளப் போட்டியில், அன்னுார் வீரர் பதக்கம் வென்றார்.தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் கடந்த மாதம் நடந்தன. இதில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.அன்னுார் அத்லெட்டிக் கிளப்பைச் சேர்ந்த நான்கு வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.இதில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில், சங்கர் 41.66 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தட்டெறிதலில் இனியவன் 37.57 மீட்டர் தூரம் எறிந்து ஆறாம் இடம் பெற்றார். சாதித்த வீரர்களுக்கு, கிளப் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.
14-Nov-2024