மாநில பூப்பந்து போட்டி: களம் காண அணி தயார்
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவில், மாணவியருக்கான பூப்பந்து போட்டி, கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. பீளமேடு ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர், 19 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மூன்றாம் இடம் பிடித்தனர். சிறந்த வீரர்களாக, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மிருதுளா, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஜனனி மற்றும் மகிளிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முதலிடம் பெற்ற 19 வயதுக்கு உட்பட்ட அணி, திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியிலும், 14 வயதுக்கு உட்பட்ட அணி, ராணிப் பேட்டையில் நடக்கும் போட்டியிலும் பங்கேற்க உள்ளன.