உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநில பட்ஜெட்: சைமா வரவேற்பு

 மாநில பட்ஜெட்: சைமா வரவேற்பு

கோவை: இடைக்கால பட்ஜெட்டை, தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது. சைமா தலைவர் துரை பழனிசாமி அறிக்கை: தனித்துவமிக்க ஜவுளிக் கொள்கைகளை அமல்படுத்தும் வகையில், இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1,943 கோடி, குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,943 கோடி, தொழில்துறைக்கு ரூ.4,282 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கைகளால், ஜவுளி ஆலைகள் நவீனப்படுத்தப்படுவதுடன், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும். கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில், அதிநவீன விளையாட்டு ஜவுளி பொ ருட்கள் மற்றும் இதர தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களுக்கான ஆய்வகம் அமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ