மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஆய்வு
கோவை; கோவையில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு, மாநில நுகர்வோர் ஆணைய தலைவர்சுப்பையா, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நேற்றுஆய்வு செய்தார். ஆணையத்தில் தீர்வு காணப்பட்ட வழக்குகள், நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து விசாரித்தார். கோவை நுகர்வோர் ஆணையத்தில், வழக்குகள் விரைவாக தீர்வு காணப்படுவதற்கு, ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, பாராட்டு தெரிவித்தார். நிலுவையிலுள்ள வழக்குகளை, விரைந்து விசாரித்து தீர்வு காண ஆலோசனை வழங்கினார்.