கே.எம்.சி.எச்.ல் அதிநவீன இமேஜிங் கருவி அறிமுகம்
கோவை; கே.எம்.சி.எச். மருத்துவமனை, 'சிம்பியா பரோ.ஸ்பெக்டா ஸ்பெக்ட் சிடி ' என்ற அதிநவீன இமேஜிங் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய மேம்பட்ட கருவியை அறிமுகம் செய்த, தமிழகத்தில் முதலாக, இந்தியாவின் நான்காவது மருத்துவமனையாக, கே.எம்.சி.எச். உள்ளது. ஸ்பெக்ட் மற்றும் 32 ஸ்லைஸ் சிடி இரு தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைந்த இக்கருவி, உடல் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், ஏதேனும் அசாதாரண மாறுபாடு உள்ளதா என்பதையும், மிகவும் விரிவாக தெரியப்படுத்தும் திறன் கொண்டது. இந்த நவீன மருத்துவக் கருவியைத் தருவித்து, நிறுவ தேவையான முன்முயற்சிகள் எடுத்த அணுவியல் மருத்துவர்கள் கமலேஸ்வரன், ராம்குமார் மற்றும் குழுவினருக்கு கே.எம்.சி.எச். தலைவர் நல்லா பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். கே.எம்.சி.எச். செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், ''புதிய கருவி, நோயாளிகளுக்கு சிறந்த நோயறிதல் திறன்களை வழங்குவதற்கும், மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவும் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நற்சான்றாகும், '' என்றார்.