உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பயணியை எட்டி உதைத்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர்

போதை பயணியை எட்டி உதைத்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர்

காங்கயம்: காங்கயம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சில் ஏற முயன்ற போதை பயணியை டிரைவர், நடத்துனர் எட்டி உதைத்தது குறித்து போக்குவரத்து துறையினர் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. காங்கயம் - சென்னிமலை செல்லும் அரசு டவுன் பஸ்சில் (1பி-) போதை வாலிபர் ஏற முயன்று கீழே விழுந்தார். அவரை டிரைவரும், மற்றொரு டவுன் பஸ் நடத்துனரும் முகத்தில் எட்டி உதைத்தனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. விசாரணையில், கடந்த 19ம் தேதி இரவு மழை பெய்தபோது போதையில் இருந்த வாலிபர் டவுன் பஸ்சின் அடியில் படுக்க சென்றுள்ளார். டிரைவர் சத்தம் போட்டுள்ளார். தள்ளாடியபடி பஸ்சில் ஏற முயன்றுள்ளார். அப்போது கோபியை சேர்ந்த டிரைவர் கண்ணன், 59, மற்றும் அருகில் நின்றிருந்த டவுன் பஸ் நடத்துனர் முருகானந்தம், 40 ஆகியோர் எட்டி உதைத்தது தெரிந்தது. இது குறித்து போக்குவரத்து துறையினரும், காங்கயம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை