உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  புள்ளியியல் கணக்கெடுப்பு பயிற்சி துவக்கம்

 புள்ளியியல் கணக்கெடுப்பு பயிற்சி துவக்கம்

கோவை: மத்திய புள்ளியியல் கணக்கெடுப்புக்கான பயிற்சி கோவையில் துவங்கியது. தேசிய குடும்ப வருவாய் கணக்கெடுப்பு, தமிழகத்திலுள்ள மேற்கு மாவட்டங்களில் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம், மத்திய புள்ளியியல் துறை பணியாளர்களுக்கு கடந்த இரு தினங்களாக ராம் நகரிலுள்ள அலுவலகத்தில் நடந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது. மக்களின் குடும்ப வாழ்வாதார நிலை மற்றும் வருவாய் வாய்ப்பு என்ன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கேற்ப மக்களுக்கான பொது திட்டங்களும், குடியேற்ற திட்டங்களும் வடிவமைக்கப்படவுள்ளன. தொழில் துறை வாரியாக மொத்த மதிப்பு கூட்டல், நிலையான மூலதனம், வேலைவாய்ப்பு, ஊதியம் போன்ற முக்கிய பொருளாதார குறியீடுகள் தொடர்பான கணக்குகள் மற்றும் தீர்மானங்களை எடுக்க இக்கணக்கெடுப்பு உதவும். இதில், மத்திய புள்ளியியல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் சுனிதா பாஸ்கர், கோவை பிராந்திய இயக்குநர் வினீஷ் மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள புள்ளியியல் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை