உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.டி.நாயுடுவுக்கு சிலை; இடம் தேர்வு நடக்கிறது

ஜி.டி.நாயுடுவுக்கு சிலை; இடம் தேர்வு நடக்கிறது

கோவை; 'இந்தியாவின் எடிசன்' என்றழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவுக்கு சிலை அமைக்க, முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக கோவையில் இடம் தேர்வு செய்யும் பணியில், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.கோவை - அவிநாசி சாலை வ.உ.சி.,மைதானத்தின், தென்மேற்கு பகுதியிலுள்ள இடத்தை, அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, காந்திபுரம் நஞ்சப்பா சாலை ரவுண்டானா, வடகோவை சிந்தாமணி எதிர்ப்புறத்திலுள்ள, ரவுண்டானா உள்ளிட்ட ஐந்து இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து, பரிசீலனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ