உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  திறனாய்வு தேர்வில் தேர்ச்சி விகிதம் உயர்த்த நடவடிக்கை

 திறனாய்வு தேர்வில் தேர்ச்சி விகிதம் உயர்த்த நடவடிக்கை

கோவை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, வரும் ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, மாவட்டப் பள்ளிக்கல்வி சார்பில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 40 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகக் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 60 வினாக்கள் அடங்கிய வினாத் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கெனத் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட பாடக் குறிப்புகள் மற்றும் வினா-விடைகள் அந்த குழுக்களுக்கு அனுப்பப்படுகின்றன. தமிழக அரசின் 'மணர்கேணி' செயலி வாயிலாகப் பாடங்களைக் கற்று, அதிலுள்ள வினாக்களைப் பயிற்சி செய்யுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு திறனாய்வுத் தேர்வில் கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி