உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்புகளுக்குள் வெடித்து சிதறும் கற்கள்; கனிமவளம், வருவாய்த்துறையினர் ஆய்வு

குடியிருப்புகளுக்குள் வெடித்து சிதறும் கற்கள்; கனிமவளம், வருவாய்த்துறையினர் ஆய்வு

கோவை; கிணத்துக்கடவு அருகே குடியிருப்புகளுக்குள் வெடித்து சிதறும் கற்கள் குறித்து, கனிமவளத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, அப்பகுதியில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.கிணத்துக்கடவு அருகே உள்ளது, நெ. 10 முத்துார் கிராமம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள கல் குவாரிகளிலிருந்து, பகல் நேரங்களில் வெடிவைத்து பாறைகள் சிதறும் போது ,அதில் சில பாறை துண்டுகள், அருகாமையிலுள்ள குடியிருப்புகளுக்குள் விழுகிறது.நெ. 10 முத்துாரிலுள்ள தலைகீழா பாறை தோட்டத்தில் உள்ள 93/சி4பி எண் உள்ள முகவரியில் வசிக்கும் மக்கள், 'தங்களது குடியிருப்புகளுக்குள் பாறைத்துகள்களும் கற்களும் விழுகிறது. வீட்டினுள் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளின் மேற்புறத்தில் வேயப்பட்டுள்ள ஓடுகள் சேதம் அடைந்துள்ளது' என்று நேற்று முன் தினம், கலெக்டரிடம் புகார் செய்திருந்தனர்.இதையடுத்து கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், வருவாய்ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கனிமவளத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கல் குவாரிகளை ஆய்வு செய்தனர்.கனிமவளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கனிமவளத்துறை கொடுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில், குவாரிகள் செயல்பட வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள நேரங்களில் மட்டும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கோ குடியிருப்புகளுக்கோ பாறைகள் செல்லாத வகையில், நைலான் அல்லது கம்பி வலைகளை அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லாமல் குவாரிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ