உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை நீரிழிவு நோய் மையத்தில் மன அழுத்தம் போக்க கவுன்சிலிங்

கோவை நீரிழிவு நோய் மையத்தில் மன அழுத்தம் போக்க கவுன்சிலிங்

கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை தலைவரும், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவருமான பாலமுருகன் கூறியதாவது:பெரும்பாலும் சர்க்கரை நோய், உடல் எடை அதிகம் இருப்பவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களை எளிதில் பாதிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். இல்லையெனில், மன அழுத்தம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். நார் சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்போர், தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.மன அழுத்தம், வேலைப் பளு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மன அழுத்தத்தை போக்கும் கவுன்சிலிங் பெற வேண்டும். எங்கள் மருத்துவமனையில், இத்தகைய ஆலோசனைகளை வழங்க சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !