உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு

வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு

கோவை; அகில இந்திய அளவில் நடைபெறும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பு கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது.'பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; தொழிலாளர் சங்கங்களின் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது; பொதுத்துறையின் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9ல் நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளன.ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், 'அகில இந்திய அளவில் நடைபெறும் போராட்டத்தில், முதல்முறையாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பு பங்கேற்பதால், கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி