உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து காலிறுதி போட்டிக்குள் நுழைந்த பலம் வாய்ந்த அணிகள்

கூடைப்பந்து காலிறுதி போட்டிக்குள் நுழைந்த பலம் வாய்ந்த அணிகள்

கோவை; தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம், 29ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில் 'லீக்' முறையில், 41 அணிகள் விளையாடின.இன்றும், நாளையும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்றைய முதல் போட்டியில், கோவை 'ஏ' அணி, 80-41 என்ற புள்ளிகளில், மயிலாடுதுறை அணியை வீழ்த்தியது.திருவள்ளூர் அணி, 93-83 என்ற புள்ளிகளில் மதுரை அணியையும், துாத்துக்குடி 'ஏ' அணி, 59-32 என்ற புள்ளிகளில் திருவாரூர் அணியையும், தேனி அணி, 103-69 என்ற புள்ளிகளில் திருச்சி அணியையும் வென்றன. தொடர்ந்து, 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ