உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரியில் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை

அரசு கல்லுாரியில் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய 6 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தாண்டு புதியதாக, பி.எஸ்.சி., கணினி அறிவியல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் நடந்தது. காலியாக உள்ள பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை ஆக., வரை நடந்தது. இருப்பினும், தற்போதும் பி.காம்., (பி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில், சில இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான மாணவர் சேர்க்கை, செப்., 30 வரை நடைபெறும், என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை