மாணவர் மன்ற நிறைவு விழா
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின், வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறையின் மாணவர் மன்ற நிறைவு விழா, நேற்று கல்லூரி அரங்கில் நடந்தது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் பங்கேற்றார். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.