உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலைப்பிரிவில் மாணவர்கள் ஆர்வம் வழக்கத்துக்கு மாறாக உயர்வு

கலைப்பிரிவில் மாணவர்கள் ஆர்வம் வழக்கத்துக்கு மாறாக உயர்வு

பொள்ளாச்சி; அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்ற மாணவர்களும், கலைப்பிரிவு பாடத்தை தேர்வு செய்வதிலேயே ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாக, பிளஸ் 1 வகுப்பில், அறிவியல் மற்றும் கலைப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். அதில், பெரும்பாலும், 350 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அறிவியல் பாடப் பிரிவை தேர்ந்தெடுப்பர்.ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டு, 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்ற மாணவர்களும், கலைப்பிரிவு பாடத்தில் சேர்ந்துள்ளனர். இதனால், பெரும்பாலான அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கலைப்பிரிவு பாடத்திற்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:இன்ஜினியரிங் படித்து விட்டு பொருத்தமான வேலை அமையாது, மற்ற படிப்புகளை தேர்வு செய்தால் நுழைவு தேர்வை எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட எண்ணங்களால், மாணவர்கள் பலர், கலைப்பிரிவு பாடங்களை தேர்வு செய்கின்றனர்.மேலும், அதன்வாயிலாக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், எளிதாக வெற்றி பெற்று, வேலைவாய்ப்பும் பெற்றுக் கொள்ளலாம் என, கருதுகின்றனர். குறிப்பாக, அடிப்படை கல்வி அறிவு, போதுமான அறிவாற்றல், எளிமையாக கற்று கொள்கின்ற முறை போன்றவைதான் கலை பாடப்பிரிவில் சேர காரணமாக அமைந்துள்ளது.அதுமட்டுமின்றி கலைக் கல்லுாரிகள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக அந்தந்த மாவட்டங்களில் ஏராளமாக உள்ளதால், பெற்றோர்களும் மாணவர்களின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டுகின்றனர். இதனால், பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கலைப்பிரிவு பாடங்களுக்கு, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ