| ADDED : செப் 02, 2026 08:12 PM
கோவை: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் கவுதம் பேசுகையில்,‘‘ காடுகள், வனவிலங்குகள், நீர்வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன், வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே, சமநிலை பேண வேண்டும். ஒழுக்கம், நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட்டு, கல்வியை சமூக நலனுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.